நயன்தாராவுக்கு வாழ்க்கை கொடுத்ததே நான் தான்: பிக்பாஸ் சுசித்ராவின் கணவர்

  • IndiaGlitz, [Sunday,June 13 2021]

பிரபல பாடகியும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான சுசித்ராவின் கணவர் கார்த்திக்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது மட்டுமின்றி இவர் ஒரு மிகச்சிறந்த ஸ்டாண்ட்-அப் காமடியன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது ஸ்டாண்ட்-அப் காமெடி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த நிலையில் கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகிறது. அதில் ’தமிழ் சினிமாவைப் பொருத்தவரை அமெரிக்க மாப்பிள்ளை கேரக்டர் என்றால் என்னை தான் கூப்பிடுவார்கள் என்றும், அமெரிக்க மாப்பிள்ளைக்கு கடைசி வரை கல்யாணமே நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஷாலினி, லைலா, ராணிமுகர்ஜி ஆகியோர்களை நான்தான் தானம் செய்து இருக்கிறேன் என்றும் நயன்தாராவுக்கு இப்போது ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது என்றால் அதற்கு நான் தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்

தனுஷ், நயன்தாரா, கார்த்திக் குமார் நடித்த ’யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தில் கார்த்திக் குமார் மற்றும் நயன்தாராவுக்கு தான் திருமணம் நடப்பதாக கதை செல்லும். ஆனால் கடைசி நேரத்தில் திடீரென நயன்தாராவை தனுஷ் திருமணம் செய்து கொள்வார். இந்த படத்தின் கதையை வைத்து கார்த்திக் குமார் பேசிய காமெடி வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.