'விண்ணை தாண்டி வருவாயோ 2' டீசரை வெளியிட்ட கெளதம் மேனன்?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயோ’ திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக், ஜெஸ்ஸி என்ற இரண்டு கேரக்டர்களை 10 ஆண்டுகள் ஆகிய பின்னரும் காதலர்கள் இன்னும் மறக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாகும் என்றும், அதில் சிம்பு, த்ரிஷா நடிப்பார்கள் என்றும் கெளதம் மேனன் ஏற்கனவே பல பேட்டிகளில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கெளதம் மேனன் தற்போது ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கி வருகிறார். இந்த குறும்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த டீசர் அப்படியே ’விண்ணை தாண்டி வருவாயோ படத்தின் இரண்டாம் பாகம் போலவே உள்ளது.‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த குறும்படம் மிக விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரில் த்ரிஷா போனில் வசனங்கள் ஒவ்வொன்றும் கவிதை போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.