கார்த்தி-கவுதம் கார்த்திக் படத்தின் சுவாரஸ்யமான டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,October 09 2017]

முதல்முறையாக நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் இணணந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குனர் திரு இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் நாயகிகளாக நடிக்க ரெஜினா மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்த டைட்டிலை சற்று முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு MR.சந்திரமெளலி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'மெளன ராகம்' படத்தில் கார்த்திக், ரேவதியின் தந்தையாக நடித்த பூர்ணம் விஸ்வநாதனை பார்த்து பேசிய புகழ்பெற்ற வசனம் 'MR.சந்திரமெளலி' என்பது அனைவரும் அறிந்ததே. அதே வசனம் அவர் நடிக்கும் படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

More News

பிரதமரிடம் ரஜினி, கமல் பேச வேண்டும். பிரபல இயக்குனர் கோரிக்கை

கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே ஆன்லைன் பைரஸி, திருட்டு டிவிடி ஆகிய பிரச்சனைகளால் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு திரைத்துறைக்கு ஜிஎஸ்டி

'சண்டக்கோழி 2' படப்பிடிப்பில் மயில்சாமி செய்த மகத்தான காரியம்

தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது

சென்னை காவல் நிலையத்தில் இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ 

இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ ஆக சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில்  பிரித்திகா யாஷினி இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்

கமல்-ரஜினி இருவருக்கும் சேர்த்தே 10% ஓட்டுதான் கிடைக்கும்: சாருஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்க கிட்டத்தட்ட தயாராகிவிட்டார். அவர், வரும் நவம்பர் 7ஆம் தேதி அவருடைய பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் கோரிக்கை நிராகரிப்பு: தீபாவளி படங்களின் நிலை என்ன?

நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் 64ஆம் ஆண்டின் பொதுக்குழு கூட்டத்தில் விஷால் பேசியபோது,