கார்த்தியின் 'கைதி' படம் குறித்த முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Thursday,May 09 2019]

கார்த்தி நடித்த 'தேவ்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததை அடுத்து அவர் தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நாயகியே இல்லாத இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

'கைதி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கார்த்தி கைதியாக நடித்துள்ளார். சிறையில் கைதியாக இருக்கும் கார்த்தியும் அவருடைய நண்பர்களும் நான்கு மணி நேரத்தில் ஜெயில் இருந்து எப்படி தப்பிக்கின்றனர் என்பதுதான் இந்த படத்தின் கதை.

ட்ரீம் வாரியர் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், தீனா, ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.