எதிர்பார்த்தது நடந்துவிட்டது.. 'சூர்யா 44' படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 44’ படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமான் நிக்கோபார் தீவில் நடைபெற இருப்பதாகவும், 40 நாட்கள் இந்த தீவில் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டது. அது மட்டும் இன்றி இந்த படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்கள் நிக் - பவல் இணைய இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில் சற்றுமுன் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ’சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
இன்று சந்தோஷ் நாராயணன் தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இந்த போஸ்டர் அவருக்கு மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது. எனவே எதிர்பார்த்தபடியே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைந்து விட்டதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களும் பிற தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happy Birthday Dear @Music_Santhosh 🎉🎉🎉 🤗🤗
— karthik subbaraj (@karthiksubbaraj) May 15, 2024
Let us Start the Music for #Suriya44#LoveLaughterWar#HBDSanthoshNarayanan@Suriya_offl @2D_ENTPVTLTD @stonebenchers @rajsekarpandian @kaarthekeyens pic.twitter.com/9UWqvyEH4s
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments