ரஜினி படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி: நெட்டிசன்களின் ஆச்சரிய கண்டுபிடிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ படத்தை இயக்கினர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ’பேட்ட’ படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மனைவி சத்யபிரேமா ஒரே ஒரு காட்சியில் நடித்துள்ள தகவலை தற்போது நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். ’பேட்ட’ படத்தில் கல்லூரியின் வார்டனாக பணிபுரிவதற்காக வரும் ரஜினிக்கு அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் கொடுக்கும் பெண்தான் கார்த்திக் சுப்புராஜின் மனைவி என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்து அதனை தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். இந்த தகவலை கார்த்திக் சுப்புராஜ் உள்பட படக்குழுவினர் யாரும் இதுவரை வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்த நிலையில் கொரோனா விடுமுறையில் சும்மா இருக்கும் நெட்டிசன்கள் இதனை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா படத்தின் ஹீரோயின் கேரக்டர் கிட்டத்தட்ட தன்னுடைய உண்மையான கேரக்டர் என்று சத்யபிரேமா ஒரு பேட்டியில் கூறி இருந்த நிலையில் தற்போது ’பேட்ட’ படத்தில் அவர் நடித்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
இந்த நிலையில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் சுப்புராஜ் அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments