கார்த்திக் சுப்புராஜ் மனைவியால் லண்டன் போன தனுஷ்: வைரல் புகைப்படம்

கார்த்திக் சுப்பராஜ் மனைவியால் தான் தனுஷ் லண்டன் சென்றார் என ரசிகர்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் சுருளி என்ற கேரக்டரில் நடித்து இருந்த தனுஷ் திருமணம் நின்று போனதால் லண்டன் செல்வது போன்ற ஒரு காட்சி இருக்கும். தனுஷின் திருமணம் நிற்பதற்கு ஒரு பெண் தான் காரணம் என்பதும் படம் பார்த்தவர்களுக்கு தெரியும். அந்தப் பெண்ணின் கேரக்டரில் நடித்தவர் கார்த்திக் சுப்புராஜ் மனைவி என்பது தற்போது தெரியவந்துள்ளது

பொதுவாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படங்களில் மனைவி அல்லது தந்தையை நடிக்க வைத்திருப்பார். ரஜினியின் ‘பேட்ட’ திரைப்படத்தில் கூட ரஜினி கல்லூரி வார்டனாக வேலைக்கு வரும்போது அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கும் கேரக்டரில் கார்த்தி சுப்புராஜ் மனைவி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷின் கல்யாணம் கார்த்திக் சுப்புராஜ் மனைவியால் தான் நின்றது என்றும் அவர் மட்டும் கல்யாணத்தை நிறுத்தாமல் இருந்திருந்தால் தனுஷ் லண்டனுக்கு சென்று இருக்க மாட்டார் என்றும், படமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்பது போன்ற மீம்ஸ்களை தனுஷ் ரசிகர்கள் இணைய தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் மனைவி கேரக்டரின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.