வேற லெவல் சம்பவம் செய்த கார்த்திக் சுப்புராஜ்.. 'ஜிகர்தண்டா 2' படம் குறித்த ஆச்சரிய தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் டெக்னிக்கலாக வேற லெவலில் கார்த்திக் சுப்புராஜ் சம்பவம் செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
தற்போது சென்னையில் திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்கத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த ஸ்டண்ட் காட்சி தமிழ் சினிமாவில் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் இதுவரை இல்லாத வகையில் உயர் ரக டெக்னிக்கல் காட்சிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜிகர்தண்டா முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்த பாகமும் அதே போல் மிகப்பெரிய வெற்றி அடைய படக்குழுவினர் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் வரும் 18ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் அங்கு ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கார்த்தியின் ’ஜப்பான்’ சிவகார்த்திகேயனின் ’அயலான்’ ஆகிய படங்களோடு தீபாவளி அன்று ’ஜிகர்தண்டா 2’ ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது தெரிந்ததே.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சபிக் முகமது அலி படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout