'ஜிகிர்தண்டா 2' படம் பார்த்தவர்கள் தயவுசெய்து இதை மட்டும் செய்யாதீர்கள்: கார்த்திக் சுப்புராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ’ஜிகர்தண்டா 2’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்தவர்கள் தயவு செய்து ஒன்றை மட்டும் செய்ய வேண்டாம் என கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான அனைத்து படங்களிலும் கிளைமாக்ஸ் முடிந்தாலும் கடைசி ஷாட்டில் ஒரு வித்தியாசமான சர்ப்ரைஸ் வைத்திருப்பார். ‘பீட்சா’ படம் முதல் ’மகான்’ படம் வரை அவர் இதை பின்பற்றி வருகிறார். அந்த வகையில் ’ஜிகர்தண்டா 2’ படத்திலும் கிளைமாக்ஸில் ஒரு சஸ்பென்ஸ் இருப்பதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ’யானை, சினிமா இரண்டும் நமக்கு கடவுள் கொடுத்த சிறந்த பரிசு. சினிமாவின் சக்தி அதன் பார்வையாளர்கள் குறித்த மனப்பூர்வமான வெளிப்பாடாக இருக்கும். இந்த படத்தை நாங்கள் உருவாக்கும் போது கொடுத்த அன்பை இப்போது ரிலீஸிம்போதும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் நான் இயக்கிய படம் வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ’ஜிகிர்தண்டா 2’ படம் பார்த்தவர்கள் இந்த படத்தில் இருக்கும் சர்ப்ரைஸை தயவு செய்து உடைத்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார்.
#JigarthandaDoublex - Is all yours now....
— karthik subbaraj (@karthiksubbaraj) November 10, 2023
God's best gifts to us are Elephants & Cinema !!
This film is our team's heartfelt portrayal of the 'Power' of Cinema and it's Audience......
Hope you all Love the film as much as we did while making it.....
Am Emotionally Happy… pic.twitter.com/AmheuMAPdx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments