கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டதற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம்: கார்த்திக் நரேன்
- IndiaGlitz, [Friday,August 13 2021]
நான் கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டதற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம் என இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இயக்குனர் கார்த்திக் நரேன் கடந்த 2016 ஆம் ஆண்டு ’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் தனுஷ் நடித்து வரும் ‘மாறன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் கார்த்திக் நரேன் இயக்கிய ’அக்னி’ என்ற பகுதியில் ஒளிபரப்பானது. இந்த பகுதிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பாக கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேனை தொலைபேசியில் பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட கார்த்திக் நரேன், தான் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது ’ஜிகிர்தண்டா’ படம் வெளியானது என்றும் அந்த படத்தில் உள்ள ’பொட்டிக்கடை பழனி’ காட்சியை பார்த்த பின்னர் தான் தனக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் படிப்பை பாதியில் விட்டுவிட்டு திரையுலகிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் ஆச்சரியம் அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது