கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Monday,February 15 2016]

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், ரஜினி, விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ள 'இறைவி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த திரைப்படம் மார்ச் மாதம் 25 ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது. மேலும் இம்மாத இறுதியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, அஞ்சலி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு இந்த படம் ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.