த்ரில் படத்தை உருவாக்கும் புதிய டீமுக்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'அட்டு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷிரித்விக். இவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்திற்கு 'டோலா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ஆதிசந்திரன் இயக்கவுள்ள இந்த படத்தை ஷாம்குமார் தயாரிக்கவுள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட கார்த்திக் சுப்புராஜ், 'ஒரு புதிய டீமிடம் இருந்து உருவாகவிருக்கும் இந்த த்ரில் படத்திற்கு எனது வாழ்த்துக்கள். அறிமுக தயாரிப்பாளர் ஷாம் மற்றும் அறிமுக இயக்குனர் ஆதிசந்திரனுக்கு உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.
Here's the first look of #Dola a horror thriller from a new team.... All the best to debut producer @shamtheboss0400 , debut dir Aadhichandran, @RishiRithvik5 & whole team ?? pic.twitter.com/GoVUrfl50m
— karthik subbaraj (@karthiksubbaraj) May 22, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com