ரஜினியுடன் ஒரு சந்திப்பு.. கார்த்திக் சுப்புராஜின் நெகிழ்ச்சியான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தமிழ் திரை உலக பிரபலங்கள் பலர் பாராட்டிய நிலையில் நேற்று இந்த படத்தை பார்த்து ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையில் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினியை தனது குழுவினர்களுடன் நேரில் சென்று சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
தலைவர் அவர்கள் எங்கள் குழுவினரை மிகவும் அன்புடனும் பாசத்துடனும் பாராட்டியதற்கு நன்றி என்றும தெரிவித்த கார்த்திக் சுப்புராஜ், அவருடன் இருந்த அந்த ஒரு மணி நேர உரையாடல் எனக்கு மட்டுமின்றி எங்கள் ஒட்டு மொத்த குழுவுக்கும் பாசிட்டிவ்வாக இருந்தது என்றும் அவரை சந்தித்ததே ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் சந்தோஷ் நாராயணன், ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் இருந்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Thanks a lot Thalaivaa for showering your Love and Praises to #JigarthandaDoubleX 🙏🏼🙏🏼🙏🏼
— karthik subbaraj (@karthiksubbaraj) November 15, 2023
Your one hour long conversation with us gave me and the whole team such a Positive vibe n aura sir......
Loads of Love to you Thalaivaa from team #JigarthandaXX pic.twitter.com/xvrwSHokAu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com