'கபாலி' டீசரை எதிர்நோக்கும் கோலிவுட் நட்சத்திரங்கள்

  • IndiaGlitz, [Saturday,April 30 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு யூடியூப் இணையதளத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அதிகாரபூர்வமாக அறிவித்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாகும் 'கபாலி'யின் டீசரை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.


முன்பெல்லாம் ரஜினியின் படங்கள் வெளியாகும் நாள்தான் திருவிழா போன்று இருக்கும் நிலையில் தற்போது ரஜினி படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் நாளும் திருவிழாக் கோலமாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக தற்போதைய இண்டர்நெட் உலகில் நாளை பதினோரு மணிக்கு சமூக வலைத்தளங்கள் ரஜினி ரசிகர்களால் தெறிக்க வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபல இயக்குனரும் ரஜினியின் தீவிர ரசிகர்கருமான கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் 'என்னுடைய போன், டிவி, லேப்டாப் மற்றும் இணையம் சம்பந்தப்பட்ட அனைத்துமே நாளை முழுவதும் நான்ஸ்டாப்பாக 'கபாலி' டீசர்தான் ஒலிக்கும்' என்று கூறியுள்ளார்.

மேலும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய சமூக இணையதளத்தில், 'நாளை ஒரு முக்கிய படப்பிடிப்பை தலைவரின் 'கபாலி' டீசரை பார்க்க வேண்டும் என்பதற்காக கேன்சல் செய்துவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

இயக்குனர் பாலாஜி மோகன் கூறியதாவது: ஏதாவது வேலையோ அல்லது ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவோ செய்வதாக இருந்தால் நாளை காலை 11மணிக்கு முன்னதாக செய்யவும், ஏனெனில் 11 மணிக்கு தலைவர் வருகிறார்' என்று பதிவு செய்துள்ளார்.

More News

விஷாலின் மனித நேயத்திற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக நாசர், விஷால், கார்த்தி உள்பட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதில் இருந்தே நலிந்த நாடக மற்றும் திரைப்பட...

ராணா-யுவன்ஷங்கர் ராஜா இணையும் தமிழில் ஒரு சரித்திர படம்

எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி' படத்தில் பிரபாஸூக்கு இணையாக வில்லனாக நடித்து மிரட்டிய ராணா அதன் பின்னர் 'பெங்களூர் நாட்கள்' படத்தில் நடித்தார்...

மனிதனுக்கு வரிவிலக்கு மறுப்பு. உதயநிதியின் அதிரடி முடிவு

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கெத்து' படத்திற்கு வரிவிலக்கு தர தமிழக அரசு மறுத்ததும்...

'விஜய் 60' படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'விஜய் 60'...

'கபாலி' டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம். எஸ்.தாணு அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அட்டக்கத்தி' பா.ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணுவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'கபாலி'...