'பேட்ட' படக்குழுவினர்களுக்கு 'குணமா' கோரிக்கை விடுத்த கார்த்திக் சுப்புராஜ்

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கோரிக்கையை தனது படக்குழுவினர்களுக்கு முன்வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்படும் புகைப்படம், வீடியோக்களை லீக் செய்ய வேண்டாம் என்றும் உங்கள் எல்லோரின் ஒத்துழைப்பு இந்த விஷயத்தில் தனக்கு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் பேட்ட' படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை ஒரு முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்பியதை வருத்தத்துடன் குறிப்பிட்ட கார்த்திக் சுப்புராஜ், ஒரு முழு படத்தின் திருட்டுவீடியோக்களை கூட இதுமாதிரி ஊடகங்கள் எதிர்காலத்தில் வெளியிட தயங்க மாட்டார்கள் என்றும் இது ஊடக தர்மத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் 'குணமா' சொன்ன இதே கருத்தை சமீபத்தில் 'சர்கார்' படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எச்சரிக்கையுடன் தெரிவித்தார் என்பதுடன் இதுகுறித்து சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

விஜய்சேதுபதி அணிக்கு கிடைத்த முதல் வெற்றி

ஒவ்வொரு ஆண்டும் புரோ கபடி போட்டிகள் நடந்து வருவது தெரிந்ததே. கடந்த ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன், தமிழ் தலைவாஸ் அணிக்கு விளம்பர தூதராக இருந்தார்

'ஜருகண்டி' ரிலீஸ் தேதி அறிவிப்பு: பிக்பாஸ் டேனியலுக்கு திருப்பம் ஏற்படுமா?

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜருகண்டி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஷால் பாணியில் களத்தில் இறங்கிய வரலட்சுமி

கமல் பாணியில் விஷாலும் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதும், அந்த நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ளது என்பதும் தெரிந்ததே

விஜய்சேதுபதிக்காக விஷால் எடுத்த அதிரடி நடவடிக்கை

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' ரிலீசின்போது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் விஷாலுக்கும் இடையே பைனான்ஸ் பிரச்சனை ஏற்பட்டதாகவும்,

விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்: காவல்துறையில் புகார் செய்ய காமெடி நடிகர் முடிவு

கடந்த இரண்டு நாட்களாக காமெடி நடிகர் கருணாகரனுக்கு விஜய் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் மோதல் நடந்து வருவது தெரிந்ததே