கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்புடன் வெளியான மாஸ் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மாஸ் டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி நடித்த ’பீட்சா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்பதும் அதன் பிறகு அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கினார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜின் இரண்டாவது படமான ’ஜிகிர்தண்டா’ கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே இந்த படத்தை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து ’ஜிகிர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய புதிய போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த படத்தில் நடிக்கக் கூடிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் டீசரின் மூலம் வெளியிட உள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ’ஜிகிர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Starting my next ...
— karthik subbaraj (@karthiksubbaraj) December 11, 2022
" Jigarthanda DoubleX "
It's DoubleX of Everything... ??
Revealing our ⭐️ Cast n Crew with...
A Kind of... Teaser releasing today 6 pm
Need all you Blessings n Support as Always ????#JigarthandaDoubleX #AkindofTEASER @stonebenchers @kaarthekeyens pic.twitter.com/LVAe0cf5js
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments