ரஜினியுடன் கார்த்திக் சுப்புராஜ் திடீர் சந்திப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏற்கனவே முடிந்துள்ள '2.0' மற்றும் 'காலா' ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளிவரவிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்
ரஜினிகாந்த் இன்னும் ஒருசில மாதங்களில் அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதால் இந்த படத்தில் அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்தார். புதிய படத்தின் கதை, காட்சிகள் குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது
ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் இணையும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments