ஒயின்ஷாப் வைக்க இடமிருக்கு, நீட் தேர்வு எழுத இடமில்லையா? பிரபல இயக்குனர் ஆவேசம்

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் அதுவும் ராஜஸ்தான் போன்ற தொலைதூர மாநிலங்களில் நீட் தேர்வு மையத்தை சி.பிஎஸ்.இ. அமைத்துள்ளது. சி.பி.எஸ்.இ-இன் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்  கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. 

இந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள எல்லா தெருக்களிலும் ஒயின்ஷாப் திறக்க இடமிருக்கிறது. ஆனால், நீட் தேர்வு எழுத தமிழகத்தில் இடமில்லையா? உங்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

மேலும் ‘தமிழகத்தில் நீட் தேர்வைத் தடைசெய்’ என்ற கோரிக்கையில் இருந்து, ‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்துங்கள்’ என்ற நிலையை கொண்டு வந்துவிட்டது ஒரு அருமையான விளையாட்டு. உண்மையில் நமது குரல் கவனிக்கப்படுகிறதா? என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

More News

ரயில் கழிவறை நீரை டீயில் கலந்த விவகாரம்: ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை

ரயில் கழிப்பறையில் உள்ள தண்ணீரை தேநீர் தயாரிக்க எடுத்த டீ விற்பனையாளர் வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது

நீட்டிற்காக செல்லும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ராஜஸ்தான் தமிழ் சங்கம்

மருத்துவ படிப்பு படிக்கவிருக்கும் மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் 6ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெறவுள்ளது.

அஜித்துக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி

தல அஜித் நடிப்பு மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் ரேஸ், கார் ரேஸ் உள்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர் என்பது தெரிந்ததே.

கமல் கட்சியின் முதல் விசில் இதுதான்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தேசிய விருது புறக்கணிப்பு குறித்து பாரதிராஜா

சமீபத்தில் திரைப்பட கலைஞர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு தமிழ் படங்களுக்கு வெறும் நான்கே விருதுகள் மட்டுமே கிடைத்தது.