ஒயின்ஷாப் வைக்க இடமிருக்கு, நீட் தேர்வு எழுத இடமில்லையா? பிரபல இயக்குனர் ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் அதுவும் ராஜஸ்தான் போன்ற தொலைதூர மாநிலங்களில் நீட் தேர்வு மையத்தை சி.பிஎஸ்.இ. அமைத்துள்ளது. சி.பி.எஸ்.இ-இன் இந்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள எல்லா தெருக்களிலும் ஒயின்ஷாப் திறக்க இடமிருக்கிறது. ஆனால், நீட் தேர்வு எழுத தமிழகத்தில் இடமில்லையா? உங்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
மேலும் ‘தமிழகத்தில் நீட் தேர்வைத் தடைசெய்’ என்ற கோரிக்கையில் இருந்து, ‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்துங்கள்’ என்ற நிலையை கொண்டு வந்துவிட்டது ஒரு அருமையான விளையாட்டு. உண்மையில் நமது குரல் கவனிக்கப்படுகிறதா? என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
There are venues available to open up wine shops in every street but it's tough to find venues for #NEET exams in TN?? Atrocity reaching new heights!! Strongly condemn this....
— karthik subbaraj (@karthiksubbaraj) May 4, 2018
BUT.. From 'Ban NEET in TN' to 'Conduct NEET in TN'... whattey game..
Do our voices really matter?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout