இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ? ரஜினி பட இயக்குனர் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்ததால் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவர் உள்ள வீட்டுக்கு சொந்தக்காரர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் சுற்றுச்சுவர் விபத்தில் பலியான 17 பேர்களின் உடல் இன்று ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இதில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் சுற்றுச்சுவர் சம்பவத்திற்கு பல திரையுலக பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை வாங்குமோ?? என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் 17 உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்து மனம் மிகவும் வேதனையடைகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ??
— karthik subbaraj (@karthiksubbaraj) December 3, 2019
Wall of Discrimination.... Pathetic & Painful!!#தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி pic.twitter.com/vKuEs1d8Mb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments