கார்த்திக் நரேனின் 3வது படம் குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 10 2018]

'துருவங்கள் 16' படத்தின் மூலம் கோலிவுட்டின் கவனத்தை தனது பக்கம் திருப்பியவர் 22 வயது இளைஞர் கார்த்திக் நரேன். இந்த படம் பெரிய புரமோஷன் இல்லாமல் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த நிலையில் கார்த்திக் நரேன் தற்போது அரவிந்தசாமி, ஸ்ரேயா, சந்தீப் உள்பட பலர் நடித்த 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். கௌதம் மேனன் தயாரித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி எந்த நேரமும் வெளிவர வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் மூன்றாவது படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படம் தனது முந்தைய இரண்டு படங்கள் போன்று த்ரில் படம் இல்லை என்றும் இதயத்தை வருடும் வித்தியாசமான திரைக்கதை என்றும் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை தனது சொந்த நிறுவனமான நைட் நாஸ்டால்ஜியா ஃபிலிமோடெயின்மெண்ட் என்ற நிறுவனமும் இன்னொரு பிரபல நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் டைட்டில் உள்பட பிற விபரங்களுடன் கூடிய போஸ்டர் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

More News

விஜய் அண்ணாகிட்ட கொடுத்துடுங்க: ஹரிஷ் கல்யாணை மெர்சலாக்கிய ரசிகையின் பரிசு

சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழாவுக்கு ரஜினி, கமல் உள்பட கோலிவுட் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.

மேக்கப் கலைஞர் தீக்சிதாவின் நட்சத்திர அவதாரங்கள்

திரையுலகில் மேக்கப் கலைஞர்களின் பணி இன்றியமையாத ஒன்று. அழகில்லாதவர்களுக்கு அழகூட்டுவதும், அழகானவர்களை அழகுக்கு அழகூட்டுவதும் மேக்கப் கலைஞர்களின் பணியாக உள்ளது.

மூத்த கலைஞர்கள் அவமதிப்பா? எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டுக்கு விஷால் பதில்

சமீபத்தில் நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை பதவியை ராஜினாமா செய்த எஸ்.வி.சேகர், மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு தனக்கு முறையான அழைப்பு அனுப்பப்படவில்லை

ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கம்: முடிவுக்கு வந்தது போக்குவரத்து போராட்டம்

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு வாரமாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது/

500 ரூபாய்க்கு அன்லிமிட்டட் பிளான் இருக்கும்போது ரூ.7500 தொலைபேசி படி தேவையா?

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்த மசோதா இன்று சட்டமன்றத்தில் நிறைவேறியது. இதன்படி எம்.எல்.ஏக்களுக்கு 100% ஊதிய உயர்வு கிடைக்கும்.