நடிகராக மாறிய இயக்குனர் கார்த்திக் நரேன்!

  • IndiaGlitz, [Wednesday,April 03 2019]

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் ஒருவராகிய கார்த்திக் நரேன் இயக்கிய முதல்படமான 'துருவங்கள் 16' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அரவிந்தசாமி நடித்த 'நரகாசுரன்' படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் நரேன், தற்போது 'நாடக மேடை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் கார்த்திக் நரேன் ஒரு தமிழ்ப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற செய்திகள் வெளிவந்துள்ளது.

சந்திப் கிஷான், அன்யா சிங் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கி வரும் படம் 'கண்ணாடி'. இந்த படத்தில் ஒரு இளமையான கேரக்டர் இருப்பதாகவும், இந்த கேரக்டரில் நடிக்க பலர் பரிசீலிக்கப்பட்ட நிலையில் சந்தீப் கிஷான், கார்த்திக் நரேனை பரிந்துரை செய்ததாகவும், அதனையடுத்து கார்த்திக் நரேன் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சந்தீப் கிஷான், கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் 'கண்ணாடி' படத்தில் 'குக்கூ' படத்தில் நடித்த நடிகை மாளவிகா நாயரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் 'கண்ணாடி' திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

செக் மோசடி வழக்கில் மோகன்பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை!

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கருணாநிதிக்கு இசையஞ்சலி செலுத்திய ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவர்!

சென்னையை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மாணவர் லிடியன்நாதஸ்வரம் கலந்து கொண்டு அதிவேகமாக பியானோ வாசித்து தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற பட்டம் பெற்றார்

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அஜித், ஷங்கர் பட நடிகர்!

வரும் மக்களவை தேர்தலில் திரையுலகை சேர்ந்த பலர் போட்டியிடுவது குறித்து வெளியாகும் செய்திகளை பார்த்து வருகிறோம்.

இயக்குனர் மகேந்திரனின் திரை பொக்கிஷங்கள்

நூறு வருட தமிழ் சினிமா குறித்து ஒரு வரலாற்று புத்தகம் எழுதினால் அதில் மகேந்திரன் பெயர் இடம்பெறவில்லை என்றால் அந்த புத்தகம் முழுமை அடையாது.

ரஃபேல் புத்தகம் - மோடி திரைப்படம்: ஒப்பிடும் நடிகர் பிரகாஷ்ராஜ்

எழுத்தாளர் எஸ்.விஜயன் எழுதிய ரஃபேல் ஊழல் குறித்த புத்தகம் இன்று சென்னையில் இந்து என்.ராம் அவர்களால் வெளியிட இருந்த நிலையில் திடீரென இந்த புத்தகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்தது.