கார்த்திக் நரேனின் அடுத்த படம் ரெடி: ரிலீஸ் எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ’மாறன்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில் தற்போது அவருடைய அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
தமிழ் திரையுலகின் இளம் இயக்குனரான கார்த்திக் நரேன், ‘துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு ’மாஃபியா’, ‘மாறன்’ ஆகிய படங்களை இயக்கியவர் தற்போது ’நிறங்கள் மூன்று’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
இந்த படத்தில் நாயகனாக அதர்வா நடித்திருக்கும் நிலையில் ரகுமான் மற்றும் சரத்குமார் ஆகியோர் இரண்டு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டிஜோ டாமி ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பெஜாய் இசையும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
It’s a wrap! ??#NirangalMoondru ????@Atharvaamurali @realsarathkumar @actorrahman @Ayngaran_offl pic.twitter.com/gKGD7xEeal
— Karthick Naren (@karthicknaren_M) April 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments