கடைசியில எது ஜெயிக்கும்... சிங்கமா? நரியா? 'மாஃபியா' டீசர் விமர்சனம்

  • IndiaGlitz, [Monday,September 16 2019]

‘துருவங்கள் 16’ என்ற ஹிட் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் அடுத்த படம் ‘மாஃபியா’. இந்த படத்தின் டீசரை சமீபத்தில் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வியந்து, இயக்குனரை பாராட்டியது குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

‘ஒரு காட்ல ஒரு சிங்கம் இருந்துச்சாம், மத்த விலங்குகளுக்கெல்லாம் அதுதான் ராஜா... மீறி அதை சீண்டினா... எதிரிகள சந்திக்கிறது சிங்கத்திற்கு ஒண்ணும் புதுச்சில்லை. ஒரு யுத்தம்ன்னும் வந்துட்டா அதோட கோபத்தை யாராலும் தாக்கு பிடிக்க முடியாது’ என்று அருண்விஜய்யும், அதே காட்டில ஒரு நரி இருந்துச்சாம். அதோட எண்ணங்களையும் செயல்களையும் யாரெல்லையும் புரிஞ்சுக்கவே புடியாதாம். ஆனால் ஒரு யுத்தத்தில நரியோட சூழ்ச்சிகளை யாராலும் ஊகிக்க முடியாது என்று பிரச்சன்னாவும் பேசும் வசனங்கள் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிப்பதோடு, தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வித்தியாசமான டீசர் வந்ததில்லை என்றே தோன்றுகிறது. கடைசியில் ஜெயிப்பது யார்? சிங்கத்தின் பலமா? நரியின் சூழ்ச்சியா? என்பதே இந்த அதிரடி ஆக்சன் படத்தின் கதை

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண்விஜய், ப்ரியா பவானிசங்கர், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை ஒரு ஆக்சன் படத்திற்கு பொருத்தமாக உள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளில் கோகுல் பினாயின் ஒளிப்பதிவு அசத்துகிறது. மொத்தத்தில் வித்தியாசமான திரைக்கதை அமைப்பவர் என்ற பெயரை பெற்ற கார்த்திக் நரேன் இந்த படத்தையும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருப்பார் என தெரிகிறது.

More News

 ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில்!

பிரபல நடிகைகளான  ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா ஆகிய மூவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர் என்ற செய்தி ஏற்கன்வே தெரிந்ததே.

வேற வழியில்ல குருநாதா! சாண்டி நாமினேட் செய்த இருவர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் நடந்து வருகிறது. இதுவரை மோசமாக விளையாடியவர்களை நாமினேஷன் செய்த போட்டியாளர்கள் தற்போது இறுதிக்கட்டத்தில்

கமல்ஹாசன் கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

இந்தி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் இன்று நேற்றல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தி எதிர்ப்பை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திய கட்சிகளும் உண்டு.

கமல்ஹாசன், ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்த சுப்பிரமணியன்

மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையில் இருப்பதாகவும், அதற்காக இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

விஜய்க்காக கொள்கையை விட்டுக்கொடுத்த நயன்தாரா!

Read more at: https://www.sify.com/movies/nayanthara-to-relax-her-policy-for-bigil-audio-launch-news-tamil-tjqkgobjieecd.html