கார்த்திக் நரேனிடம் நம்பிக்கை மோசடி செய்தது யார்? டுவீட் ஏற்படுத்திய பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,March 27 2018]

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய முதல்படமான 'துருவங்கள் 16' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் தனது மூன்றாவது படமான 'நாடக மேடை' என்ற படத்தை விரைவில் இயக்கவுள்ளார். இந்த நிலையில் தவறான நம்பிக்கை குறித்து கார்த்திக் நரேன் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து நம்பிக்கை வையுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் கண்ணால் காண நேரிடும்” என்று கூறியுள்ளார்.

திடீரென தத்துவம் பொழியும் வகையில் கார்த்திக் நரேன் டுவீட் இருந்தது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக சொல்லுங்கள் என்று அவரது இந்த டுவீட்டின் கீழே கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. கார்த்திக் மனதில் உள்ளதை வெளியே சொன்னாலன்றி இந்த நம்பிக்கை மோசடி குறித்த மர்மத்திற்கு விடை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

டேட்டா லீக் எதிரொலி: ஃபேஸ்புக்கில் இருந்து விலகினார் பிரபல நடிகர்

சமீபத்தில் ஃபேஸ்புக் பயனாளிகளின் டேட்டாக்கள் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ச் அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தால் திருடப்பட்டு அவை அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாகவும்,

தமிழ் நடிகைக்கு சாமியார் அளித்த பரிசு

இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் பேரணி ஒன்றை நடத்தினார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு சிக்கலா?

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைதால், இன்று அம்மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

கோடை விடுமுறையை குறிவைக்கும் விஜய்சேதுபதியின் படம்

அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஐந்து படங்களில் நடித்து வருகிறார்

அடுத்த தலைமுறை இளைஞர்களின் டிரெண்டுக்கு மாறிய சுனைனா

கோலிவுட் திரையுலகில் தற்போது தயாரிப்பாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.