ஆதாருடன் பான் கார்டை இணைக்காமல் விட்டால் என்ன நடக்கும்? விளக்கம் அளிக்கும் வீடியோ!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பான் கார்ட் வைத்து இருக்கும் இந்திய குடிமகன்கள் அனைவரும் கட்டாயம் தங்களது பான் கார்ட் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதி எனவும் கூறப்பட்டது. ஒருவேளை இப்படி பான் கார்டுடன் ஆதாரை இணைக்காமல் விட்டால் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்பது போன்ற பல்வேறு விதிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டு இருந்தது.

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து இதற்கான சர்வரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு உள்ளது. எனவே பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி வரும் ஜுன் மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படும் என்ற மற்றொரு அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் பான் கார்ட் என்றால் என்ன? அதை ஏன் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும்? தற்போதைய சூழலில் இதைச் செய்யாவிட்டால் என்ன நடக்கும்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு சமூக ஆர்வலர் கார்த்திக் மாயக்குமார் அவர்கள் நமக்கு பிரத்யேக முறையில் விளக்கம் அளித்து உள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்று இருக்கிறது. மேலும் இந்தியாவில் ஆதார் தொடர்பான விவரங்கள் திருடப்படுகிறது என்பதுபோன்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆதாருடன் பான் கார்டை இணைக்கச் சொல்வதிலும் இதுபோன்ற நூதனம் இருக்குமோ என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பி வருகின்றனர். இதுபோன்ற சந்தேகங்களுக்கும் கார்த்திக் மாயக்குமார் விளக்கம் அளித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது பான் கார்டை விளங்கிக் கொள்வதற்கு உதவிபுரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.