முன்னாள் மனைவி சுசித்ராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக் குமார்? தனுஷ் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடகி சுசித்ரா கடந்த சில நாட்களாக யூடியூப் சேனல்களுக்கு பரபரப்பாக பேட்டி அளித்து வருகிறார் என்றும் அதில் அவர் கூறும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பல திரையுலக பிரபலங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், நடிகர் தனுஷ் உடன் ஓரினச்சேர்க்கையில் இருந்ததாக சுசித்ரா தனது பேட்டியில் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுசித்ராவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றின் மூலம் கார்த்திக் குமார் பதில் அளித்து இருந்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது தனது முன்னாள் மனைவி சுசித்ராவுக்கு கார்த்திக் குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் சுசித்ரா கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் தனது பொய்களை கூறும் பேட்டிகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.
சுசித்ராவுக்கு மட்டுமின்றி அவரை பேட்டி எடுத்த யூடியூப் சேனலுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த வக்கீல் நோட்டீஸிற்கு தகுந்த பதில் கிடைக்கவில்லை என்றால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கார்த்திக் குமாரின் இந்த வக்கீல் நோட்டீசுக்கு சுசித்ராவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments