நான் ஒரு ஓரின சேர்க்கையாளனா? சுசி குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பாடகி சுசி தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச் சேர்க்கையாளர் என குற்றஞ்சாட்டி இருந்த நிலையில் அதற்கு கார்த்திக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாடகி சுசி அவ்வப்போது பேட்டி என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பதும் அதன் அடிப்படையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் அவருக்கும் ஒரு நடிகருக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக கூறி இருந்தார்.
சுசியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து இன்ஸ்டாவில் கார்த்திக் குமார் பதில் கொடுத்துள்ளார். ’நான் ஒருவேளை ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதனை வெளியே சொல்ல எனக்கு தயக்கம் இல்லை, அதற்காக நான் அசிங்கப்பட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
எந்த இடத்திலும் இன்னொருவரை கஷ்டப்படுத்த வேண்டிய தேவை எனக்கு இல்லை, சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் நிகழ்ச்சி நடந்தால் அதில் நான் கலந்து கொள்வேன், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதால் நானும் ஓரினச்சேர்க்கையாளன் என்ற அர்த்தம் இல்லை, ஒருவேளை நான் ஓரினச் சேர்க்கையாளராக இருந்தால் அதை நான் ஓபன் ஆக ஒப்புக்கொள்வேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுசியின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக கார்த்திக் குமாரின் இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com