கார்த்திக் சிதம்பரம் ஆடிட்டர் திடீர் கைது! அமலாக்கத்துறை அதிரடி
Send us your feedback to audioarticles@vaarta.com
என்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டு அதுகுறித்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென கைது செய்துள்ளனர். இந்த கைதை தொடர்ந்து மேலும் சில கைது நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த 2007-ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.307 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சட்டப்பட்டது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்தான் அந்த நிறுவனத்துக்கு அனுமதி பெற்றுத் தந்ததாகவும், அதற்கு பிரதிபலனாக கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக் சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் திடீரென கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments