கார்த்திக் சிதம்பரம் அதிரடி கைது: அவசரமாக இந்தியா திரும்புகிறார் சிதம்பரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்லின் மகன் கார்த்திக் சிதம்பரம் சற்றுமுன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் தமிழக போலிசாரின் உதவியால் கைது செய்யப்பட்டு டெல்லி அழைத்து செல்லப்பட்டதாகவும், இன்று மாலை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது லண்டனில் உள்ளார். மகன் கார்த்திக் கைது செய்தி அறிந்ததும், அவர் அவசரமாக இந்தியா திரும்பவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அன்னிய முதலீடு செய்வதற்கு கார்த்தி சிதம்பரம் உடந்தையக இருந்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாத வகையில் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கிய நிலையில் இன்று அவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்
கடந்த 16-ஆம் தேதி கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout