ரோல்லிங் சார்! கார்த்தியின் அடுத்த பட படப்பிடிப்பு தொடங்கியது

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள “ கார்த்தி-17 “ திரைப்படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இன்று நடந்த இந்த படத்தின் பூஜையில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் ,இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D எண்டர்டெயின்மெண்ட் ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் ,இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சிவகுமார் கிளாப் அடித்து படபிடிப்பை துவக்கி வைக்க சூர்யா கேமராவை ரோல்லிங் செய்தார்.

ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் கார்த்தி- 17 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார் , இணை தயாரிப்பு ஜெய் ஜெகவீரன் , ரம்யா கிருஷ்ணன் , பிரகாஷ் ராஜ் , RJ விக்னேஷ் காந்த் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் , ஒளிப்பதிவு வேல்ராஜ் , படத்தொகுப்பு ரூபன்.  

இந்த படம் கார்த்தியின் மற்றொரு வெற்றிப்படமாக அமைய கோலிவுட் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'வடசென்னை' குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த கூட்டணி 'வடசென்னை திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம்: விழித்தெழு என்று கூறிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்குவதற்கு முன்பே அவர் தமிழக அரசு பல துறைகளில் செயலற்று இருப்பதை தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டி வந்தார்.

மீண்டும் ஒரே நாளில் மோதும் அஜித்-விஜய் படங்கள்

அஜித்தின் வேதாளம், விஜய்யின் மெர்சல், விஜய்சேதுபதியில் விக்ரம்வேதா உள்ளிட்ட ஒருசில படங்கள் சென்னையில் மறுவெளீயிட்டாக திரையிடப்படவுள்ளது.

நாச்சியார் தெலுங்கு ரீமேக்கில் நம்பர் ஒன் நடிகை?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படம் மூன்றாவது வாரமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது

கார்த்தியின் மெகா பட்ஜெட் படத்தின் முக்கிய அறிவிப்பு

கார்த்தி ரகுல் ப்ரித்திசிங் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று'; திரைப்படம் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த நிலையில் கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் இணையும் படத்தின் அறிவிப்பு .