ஒரே படத்தில் சூர்யா-கார்த்தி-விஷால்

  • IndiaGlitz, [Wednesday,April 27 2016]
சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைத்த லாபத்தில் நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டதும் மீதிப்பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டதாக வந்த செய்தியினை விஷால் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்ததை பார்த்தோம். இந்நிலையில் நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டும் பணிக்காக நிதி திரட்ட அடுத்தகட்ட திட்டம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

நட்சத்திர கிரிக்கெட்டை அடுத்து இளையதலைமுறை நடிகர்கள் அனைவரும் இணைந்து ஒரு திரைப்படம் தயாரிக்கும் முயற்சி ஆரம்பமாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.
மேலும் இந்த படத்தில் ஜீவா மற்றும் ஆர்யா முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குபவர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.