கார்த்தி, விஜய்சேதுபதி திரைப்பட பாடலாசிரியர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

  • IndiaGlitz, [Sunday,February 20 2022]

47 வயதான தமிழ் திரைப்பட பாடலாசிரியர் உடல்நலக்குறைவால் காலமானார் செய்தி வெளியாகியுள்ளதை அடுத்து தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’, விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ரெளத்திரம், மாநகரம் போன்ற ஒரு சில படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் பாடலாசிரியr லலிதானந்த்.

இவர் கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு வெளியான அருண்பாண்டியனின் ‘அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் லலிதானந்த் தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.