சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கார்த்தி சொன்னது என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி கூறிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
குறிப்பாக இந்த படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் வரும் சூர்யா கலக்கி இருப்பார் என்பதும் அடுத்த பாகத்தில் அவர்தான் வில்லனாக நடிக்கப் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் சூர்யாவின் ரோலக்ஸ் குறித்த ஹேஷ்டேக் இரண்டு நாட்களுக்கு மேல் சமூக வலைதளங்களில் டிரெண்டாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்தும், ‘விக்ரம்’ படம் குறித்து நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
விக்ரம் திரைப்படம் அனைவரும் குறிப்பிட்டதுபோல் கமல்ஹாசனின் உண்மையான கொண்டாட்டம். அவரை திரையில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. ஆக்ஷனும் காட்சியமைப்பும் சுவராசியமான தொடர்பு கொண்டதாகவும் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.
பகத் பாசில் தனது தீவிரமான நடிப்பை ஒருபோதும் கைவிட வில்லை. விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் புதிய பக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அனிருத் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஆபத்தான காட்சிகளில் இன்னும் பெரியதாகவும், காப்பவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றியிருக்கிறார்.
இறுதியாக ரோலக்ஸ் சாரை பார்க்க பயமாக இருந்தது. லோகேஷ் கனகராஜ் நீங்கள் உங்களின் ரசிகர் மனப்பான்மையை முழுமையாக பார்வையாளர்களுக்கு கடத்தி விட்டீர்கள்’ என்று கூறியுள்ளார்.
.@VijaySethuOffl brings out a new shade of baddie. @anirudhofficial…what a background score…he makes danger seem so large and the savior seem so powerful.
— Actor Karthi (@Karthi_Offl) June 6, 2022
Finally…mannnn #Rolex sir was SCARY. @Dir_Lokesh you transferred your fanboy excitement completely to the audience.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout