சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கார்த்தி சொன்னது என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,June 07 2022]

சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி கூறிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத்பாசில் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

குறிப்பாக இந்த படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் சிறப்பு தோற்றத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் வரும் சூர்யா கலக்கி இருப்பார் என்பதும் அடுத்த பாகத்தில் அவர்தான் வில்லனாக நடிக்கப் போகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் சூர்யாவின் ரோலக்ஸ் குறித்த ஹேஷ்டேக் இரண்டு நாட்களுக்கு மேல் சமூக வலைதளங்களில் டிரெண்டாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்தும், ‘விக்ரம்’ படம் குறித்து நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

விக்ரம் திரைப்படம் அனைவரும் குறிப்பிட்டதுபோல் கமல்ஹாசனின் உண்மையான கொண்டாட்டம். அவரை திரையில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. ஆக்ஷனும் காட்சியமைப்பும் சுவராசியமான தொடர்பு கொண்டதாகவும் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும் இருந்தது.

பகத் பாசில் தனது தீவிரமான நடிப்பை ஒருபோதும் கைவிட வில்லை. விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் புதிய பக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அனிருத் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஆபத்தான காட்சிகளில் இன்னும் பெரியதாகவும், காப்பவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றியிருக்கிறார்.

இறுதியாக ரோலக்ஸ் சாரை பார்க்க பயமாக இருந்தது. லோகேஷ் கனகராஜ் நீங்கள் உங்களின் ரசிகர் மனப்பான்மையை முழுமையாக பார்வையாளர்களுக்கு கடத்தி விட்டீர்கள்’ என்று கூறியுள்ளார்.

More News

லைப் டைம் செட்டில்மெண்ட்: கமல் கடிதம் குறித்து நெகிழ்ச்சியுடன் லோகேஷ்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும்

'எந்த ஒரு தாயும் குழந்தைக்கு ஆபத்துன்னா பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டா: நயன்தாராவின் 'O2' டிரைலர்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த 'O2' திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.

கமலுக்கு இணையாக கட்-அவுட்: லோகேஷ் சொந்த ஊர் ரசிகர்களின் அன்புமழை!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில்

நாம் மீண்டும் சந்திக்காமல் போனால்...: 'ஏகே 61' படப்பிடிப்பை முடித்த நடிகரின் நெகிழ்ச்சி பதிவு

அஜித் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் 'ஏகே 61' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த 50 நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்

'ஜெண்டில்மேன் 2' இயக்குனர் இவரா? கே.டி.குஞ்சுமோன் அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அறிமுகமான திரைப்படம் 'ஜென்டில்மேன்' என்பதும் இந்த படம் கடந்த 1993ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த இந்த படம்