சூர்யா எப்படி இருக்கின்றார்? கார்த்தி டுவீட்!
- IndiaGlitz, [Thursday,February 11 2021]
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டதாகவும் அவர் டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், ஒட்டுமொத்த திரையுலகினரும் சூர்யா விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது சூர்யாவின் சகோதரரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தனது டுவிட்டரில் சூர்யாவின் உடல்நலம் குறித்து ஒரு டுவீட் பதிவு செய்துள்ளார். அதில் ’சூர்யா அண்ணன் வீடு திரும்பிவிட்டார். அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றோம். சில நாட்கள் அண்ணன் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உங்கள் அனைவரின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு என்னால் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கார்த்தியின் இந்த டுவீட்டை அடுத்து சூர்யா முழுமையாக குணமடைந்து விரைவில் படப்பிடிப்புக்கு வர வேண்டும் எனவும் அண்ணனை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் என்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Anna is back home and all safe! Will be in home quarantine for a few days. Can’t thank you all enough for the prayers and best wishes!
— Actor Karthi (@Karthi_Offl) February 11, 2021