படைப்புகளிலும் வாழ்க்கையிலும் பேசியவர்: ஜனநாதன் மறைவு குறித்து பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் ஜனநாதன் மறைவு ஒட்டுமொத்த திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இயக்குனர் ஜனநாதன் மறைவு குறித்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஏற்கனவே பாரதிராஜா உள்பட பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்த நிலையில் சற்று முன் பிரபல நடிகர் கார்த்தி தனது டுவிட்டரில் ’படைப்புகளிலும் வாழ்க்கையிலும் தொடர்ந்து பேசியவர் ஜனநாதன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: மக்கள் நலன், பேசப்படாத சமுதாய பிரச்சனைகள், அதற்கான தீர்வு என்று தன் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் தொடர்ந்து பேசியவர் ஜனநாதன் அவர்கள். அவரின் பெயரை உச்சரிக்கும் போது அனைவரிடமும் பாசத்தையும் மரியாதையையும் பார்க்கமுடியும். அவரின் மறைவு பெரும் அதிர்ச்சி. குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’.
கார்த்தியின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.
My deepest condolences to family, friends and fans. RIP director Jananathan sir. pic.twitter.com/hCj6B7T9ka
— Actor Karthi (@Karthi_Offl) March 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments