'சிவாஜி' ரஜினி பாணியில் கார்த்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
ஷங்கர் இயக்கிய பிரமாண்டமான திரைப்படமான 'சிவாஜி' படத்தின் கிளைமாக்ஸில் ரஜினிகாந்த் மொட்டை தோற்றத்தில் தோன்றி அனைவரையும் அசத்தியிருப்பார். இதே பாணியில் கார்த்தி தற்போது நடித்து வரும் 'காஷ்மோரா' படத்தில் மொட்டை தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குனர் கோகுல் இயக்கி வரும் 'காஷ்மோரா' படத்தில் கார்த்தி மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஒரு கேரக்டருக்காக கார்த்தி சமீபத்தில் மொட்டை அடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கார்த்தி சமீபத்தில் திரைவிழாக்களில் கலந்து கொள்ளும்போது தொப்பி அணிந்து தோற்றமளிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் ஸ்ரீதிவ்யாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஒம்பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்த்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments