'இறுதிச்சுற்று' இயக்குனருக்கு கார்த்தி பாராட்டு

  • IndiaGlitz, [Tuesday,February 02 2016]

கடந்த வெள்ளியன்று வெளியான 'மாதவனின் 'இறுதிச்சுற்று' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்துக்கு கோலிவுட் திரையுலகினர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.,

இந்நிலையில் 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதாவுடன் 'ஆயுத எழுத்து' படத்தில் இணைந்து பணிபுரிந்தவருமான நடீகர் கார்த்தி இறுதிச்சுற்று படத்தை பாராட்டியுள்ளார். இந்த படத்தின் கதையை சுதாவிடம் இருந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே கேட்டதாகவும், இந்த கதை குறித்து இருவரும் ஏராளமாக டிஸ்கஸ் செய்துள்ளதாகவும் கார்த்தி கூறியுள்ளார்.


இறுதிச்சுற்று படம் சுதாவின் அபாரமான இயக்கத்தில் மாதவனின் வெறித்தனமான நடிப்பில் உருவாகியிருப்பதாகவும், மாதவனின் நடிப்புப்பசிக்கு சுதா சரியான தீனி போட்டு இருப்பதாகவும், இருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் அவர்களிடம் உதவியாளர்களாக இருந்த கார்த்தி மற்றும் சுதா இருவருமே தற்போது திரையுலகில் முன்னணி இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.