நன்றியை வார்த்தைகளால் சொல்ல முடியாது: கார்த்தியின் நெகிழ்ச்சியான பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த படத்தில் வந்தியதேவன் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் கார்த்தி தனது நன்றியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கான நன்றியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த படத்தில் வந்தியதேவன் ஆக நடித்த எனது பயணம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. முதலில் அமரர் கல்கி அவர்களுக்கு ஒரு பெரிய வணக்கத்தையும் மரியாதையையும் கூறிவிடுகிறேன். நமக்கு பொன்னியின் செல்வன் என்ற மாயாஜால காவியத்தை உருவாக்கியவர் கல்கி அவர்களுக்கு எனது கோடி நன்றிகள்.இத்தனை வருடங்களாக மறக்க முடியாத தலை சிறந்த படைப்பாக அவர் இந்த காவியத்தை வடிவமைத்துள்ளார்
மேலும் இதுவரை பார்த்திராத அளவில் வித்தியாசமான ஒளிப்பதிவை செய்த ரவிவர்மன் அவர்களுக்கும் எங்களின் பொக்கிஷம் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது இசையால் நம்மை பரவசப்படுத்தியதற்கும் நன்றி. சோழர் காலத்தில் காலத்தை நம் கண் முன்னே கொண்டு வந்த தோட்டாதரணி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
கல்கி அவர்களின் உணர்வை தனது எடிட்டிங் மூலம் வெளிப்படுத்திய ஸ்ரீகர் பிரசாத் அவர்களுக்கும், அற்புதமான வசனங்கள் எழுதி ரசிகர்களை கவர்ந்த ஜெயமோகன் சார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்த சுபாஷ்கரன் அவர்களுக்கும், அனைத்திற்கும் மேலாக அன்பான ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments