கார்த்தி-தமன்னாவின் 'தோழா' டிராக் லிஸ்ட்

  • IndiaGlitz, [Wednesday,February 24 2016]

கார்த்தி, நாகார்ஜூனன், தமன்னா நடிப்பில் வம்சி இயக்கிய 'தோழா' படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

கோபிசுந்தர் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிராக்லிஸ்ட்டில் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

1. பேபி ஓடாதே' என்ற பாடலை ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார்.

2.புதிதா' என்று தொடங்கும் பாடலை கார்த்திக் பாடியுள்ளார்.

3. ஈபிள் மேலே' என்று தொடங்கும் பாடலை ரஞ்சித் மற்றும் சுசித்ரா பாடியுள்ளனர்.

4. எனதுயிரோ' என்று தொடங்கும் பாடலை விஜய் பிரகாஷ் பாடியுள்ளார்.

5.தோழா' என்று தொடங்கும் பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஹரிசரண் பாடியுள்ளனர்.

6. டோர் நம்பர்' என்று தொடங்கும் பாடலை கீதா மாதுரி பாடியுள்ளனார்

7. நகரும்' என்று தொடங்கு பாடலை கார்த்திக் பாடியுள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் மதன்கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.