கார்த்தியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. இசையமப்பாளர் மட்டும் மாற்றம்..!

  • IndiaGlitz, [Tuesday,August 01 2023]

கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் ’சர்தார்’. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இறுதி காட்சியில் இரண்டாம் பாகத்திற்கான லீட் இருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

‘சர்தார்’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் ’சர்தார் 2’ படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் அதே போல் முதல் பாகத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் தெரிகிறது.

ஆனால் அதே நேரத்தில் ‘சர்தார்’ முதல் பாகத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கார்த்தி தற்போது ’ஜப்பான்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் ‘96’ இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், அதன் பின்னர் தான் ‘சர்தார் 2’ படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘கைதி 2’ படமும் மிக விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நயன்தாராவின் அடுத்த பட டிரைலர் ரெடி.. ரிலீஸ் எப்போது?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஷாருக்கானுடன் நடித்த 'ஜவான்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் நடித்த அடுத்த படத்தின்  டிரைலர் தயாராக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில்

93 வயதில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஏஜிங் சூப்பர் ஸ்டார்.. வைரல் புகைப்படங்கள்..!

93 வயதில் தமிழ் நடிகர் ஒருவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

4 மொழிகளில் உருவாகும் பிரபுதேவாவின் 60வது படம்.. முக்கிய அப்டேட்..!

நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவாவின் 60வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது

கார்த்தியின் 'ஜப்பான்': ஜிவி  பிரகாஷ் உடன் இணைந்த பிரபல இசையமைப்பாளர்..!

கார்த்தியின் நடிப்பில் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகிய 'ஜப்பான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒரே நேரத்தில் 4 படங்களை தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்.. மேலும் 2 படங்களை தயாரிக்க திட்டம்..!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதுகுறித்த போஸ்டர் இந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.