கார்த்திக் சுப்புராஜூடன் மணிரத்னம்-கெளதம் மேனன் இணைவார்களா?
- IndiaGlitz, [Wednesday,March 09 2016]
பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது 'இறைவி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த 'அவியல்' என்ற திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த படம் ஆறு குறும்படங்களை கொண்ட தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவில் இதுவொரு புதுமையான தொடக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து குறும்படங்களுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளதாகவும், இயக்குனர் மணிரத்னம், இயக்குனர் கெளதம் மேனன் போன்ற பெரிய இயக்குனர்கள் வருடத்திற்கு ஒரு குறும்படம் இயக்க முன்வந்தால் அந்த படங்களை தயாரிக்க தான் தயாராக இருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் மணிரத்னம், கெளதம்மேனன் ஆகியோர் குறும்படங்களை இயக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.