'அஞ்சல' படத்திற்காக 'டீ' போடும் சினிமா பிரபலங்கள்

  • IndiaGlitz, [Wednesday,December 16 2015]


விமல், நந்திதா நடிப்பில் தங்கம் சரவணன் இயக்கியுள்ள 'அஞ்சல' படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் தேவா பாடிய இந்த பாடல் 'டீ போடு ஸ்ட்ராங்கா டீ போடு' என்ற வரிகளுடன் ஆரம்பமாகிறது.

இந்த புரமோஷன் பாடலில் விமல், சூரி, ஜீவா, பாபிசிம்ஹா, சசிகுமார், ஜெயம் ரவி, தம்பி ராமையா, கார்த்தி, சிவகார்த்திகேயன், லாரன்ஸ், 'நான்கடவுள்' ராஜேந்திரன், விக்ரம்பிரபு, சமுத்திரக்கனி, ரோபோ சங்கர், ஆகியோர் நடித்துள்ளனர். கோபிசந்தர் இசையமைத்துள்ள இந்த பாடலை லலித் ஆனந்த் எழுதியுள்ளார்.

விமல்-நந்திதா இணைந்து நடித்துள்ள இந்த படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ளார். இந்த படம் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் என எதிர்பார்க்கப்படுகிறது.