close
Choose your channels

வந்தியத்தேவன் பாடிய மாஸ் பாடல்: ஜிவி பிரகாஷ் வெளியிட்ட புகைப்படம் வைரல்!

Friday, October 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியதேவன் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் கார்த்தி சொந்த குரலில் ஒரு பாடல் பாடி உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் ’சர்தார்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடப் போவதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை நடிகர் கார்த்தி பாடி உள்ளார் என்றும் கிராமப்புற பாடலான இந்த பாடல் ’ஏறுமயிலேறி’ என்று தொடங்கும் என்றும் இந்த பாடலை வந்தியதேவன் கார்த்தி பாடி உள்ளார் என்றும் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். மேலும் அவர் கார்த்தி பாடலை பாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தி ஏற்கனவே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள தயாரித்த ’கணம்’ என்ற திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார்’ படத்தில்’ கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment