இதுவே எனது பிறந்த நாள் பரிசு: ரசிகர்களுக்கு நடிகர் கார்த்தி வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு சக நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது பிறந்த நாள் செய்தியாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளி அவர் கூறியிருப்பதாவது:
அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம்! இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிக கடுமையாக உள்ளது. அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் அன்பு பரிசாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். கார்த்தியின் இந்த வேண்டுகோள் கடிதம் தற்போது வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments