ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்றினார், அவர்தான் எனது சகோதரர்: கார்த்தி பெருமிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
எனது சகோதரர் சூர்யா தனது ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்றினார் என்று பெருமிதத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி பதிவு செய்துள்ளார்.
நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த 25 ஆண்டு திரையுலக வாழ்வில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக சூர்யாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சூர்யா குறித்து அவரது சகோதரரும் நடிகருமான கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் பெருமிதத்துடன் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தனது ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்ற இரவு பகலாக கடுமையாக உழைத்தார். தனது சொந்த சாதனைகளை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் தாராளமான இதயத்தை கொண்டவர். ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தவர். அவர்தான் என் சகோதரர்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
கார்த்தியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி கார்த்தி இதுவரை வெளியாகாத சூர்யாவுடன் எடுத்த தனது குழந்தை கால புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout