கார்த்தியின் 'கைதி 2' எப்போது? அவரே அளித்த பதில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்டது. ஆனால் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து பிஸியானதால் இந்த படத்தின் அறிவிப்பு தள்ளிப்போனது.
தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ கமல்ஹாசனின் ’விக்ரம்’ தளபதி விஜய்யின் ’லியோ’ ஆகிய படங்களை அடுத்து ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதால் ‘கைதி 2’ படம் கேள்விக்குறியானது
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த கார்த்தி, ‘கைதி 2’ படம் நிச்சயம் உருவாகும் என்றும் நாங்கள் அந்த படத்தை 100% உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அதற்கான காலம் விரைவில் வரும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்து விட்டது என்றும் இந்த படத்தை அடுத்து ’96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே நலன் குமாரசாமி, பிரேம் குமார் ஆகியோர் இயக்கும் படங்களை முடித்துவிட்டு ‘கைதி 2’ படத்தில் கார்த்தி நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments