ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்குக் கார்த்தி அதிரடி பதில்

  • IndiaGlitz, [Wednesday,July 18 2018]

நடிகர் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்ல கார்த்தி முக்கிய நகரங்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில் இன்று புதுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்த படம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 'குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது பெருமைக்குரியது. அதேபோல் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்று கவனம் செலுத்தி திட்டத்தை வகுக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது' என்று கூறினார்

இந்த நிலையில் செய்தியாளர்கள் கார்த்தியிடம் ஸ்ரீரெட்டி கூறிய பாலியல் புகார் குறித்து கேள்வி எழுப்பியபோது, 'ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீரெட்டி மீது புகார் தெரிவித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.