கையில் சாட்டையை சுழற்றிய கார்த்தி: வைரலாகும் 'சுல்தான்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ’சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் டப்பிங் பணிகளும் சமீபத்தில் தொடங்கியது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் இந்த படம் பொங்கல் அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கி விட்டது. அந்த வகையில் இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி சற்றுமுன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியது
தனது சமூக வலைத்தளத்தில் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார் கார்த்தி. கார்த்தி தனது கையில் சாட்டையை வைத்து சுழற்றியபடி இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த போஸ்டரில் இருந்த இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது உறுதியாகி உள்ளது
கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். சத்யன்சூர்யன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
Dear brothers and sisters, Your love and appreciation is what keeps us going! Bringing you the first look of #Sulthan. Hope you like it! Love you guys! #SulthanFirstLook pic.twitter.com/9dkfwmBdo0
— Actor Karthi (@Karthi_Offl) October 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments